ஏழை,3ம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற நிரந்த தடை விதிக்கப்போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு..!!

வாஷிங்டன்: ஏழை, 3ம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற நிரந்த தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (27.11.2025) குடியேற்ற விதிகளை கடுமையாக்கும் விரிவான திட்டங்களை அறிவித்தார், இதில் 3ம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற நிரந்த தடை விதிக்கப்போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த சொல் அதிக வறுமை விகிதங்கள் மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மை கொண்ட நாடுகளைக் குறிக்கிறது.

அமெரிக்க குடிமக்கள் அல்லாதவருக்கு அரசின் சலுகைகள், மானிய உதவிகள் நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் அமைதியைக் குலைப்பவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் தகவல் தெரிவித்தார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெளிநாட்டினர் தம் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர். மேற்கத்திய நாகரிகத்துக்கு பொருத்தமில்லாத வெளிநாட்டினரும் அவர்கள் நாட்டிற்கு திரும்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.

Related Stories: