ஜெயங்கொண்டம், நவ.27: மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி, வங்கிகளில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் மாணவர், பொதுமக்கள் பங்கேற்றனர்.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, நேற்று ஆர்.எஸ்.மாத்தூர் ஸ்டேட் பேங்க், அசவீரன்குடிக்காடு கிராமம், இடையக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே, இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் இணைய வழி நடக்கும் குற்றங்களான, ஓடிபி எண்களை யாரிடம் பகிரக்கூடாது, தெரியாத லிங்கினை தொடக்கூடாது, டிஜிட்டல் கைது, கிரிப்டோ கரன்சி மோசடி, வெளிநாடு வேலை மோசடி, தேவையில்லாத அப்ளிகேஷன் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வங்கிகளில் பொதுமக்கள் பள்ளிகளில் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வை மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
