த.பழூர் ஆதிச்சனூர் ஊராட்சியில் அரசின் சாதனை, நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி: விண்ணபிக்க அழைப்பு

தா.பழூர், நவ.27: த.பழூர் ஆதிச்சனூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசின் சாதனை, நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடனர். அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி த.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிச்சனூர் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்வரால் கடந்த நான்கு ஆண்டுகளாக துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.

இதில் நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் ,கலைஞர் கனவு இல்லம்,விடியல் பயணம், நான் முதல்வன் உங்களைத்தேடி உங்கள் ஊரில், கள ஆய்வில் முதல்வர், வேலை வாய்ப்பு முகாம்கள், கலைஞர் கைவினைஞர் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 முதலமைச்சரின் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் தாயுமாணவர் திட்டம், நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் முகாம்,குறித்த புகைப்படங்கள், உதவும் கரங்கள் திட்டம்,தொடர்பான புகைப்படங்ஙள் இடம்பெற்றிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

Related Stories: