செங்கை பத்மநாபன் சீமானுக்கு கண்டனம்

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்த அறிக்கை: புதுச்சேரியில் நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில். சற்றும் புரிதலற்று மெட்ரோ ரயில் திட்டமே ஒரு தோல்வியான திட்டம் என கூறிய சீமானிடம் அப்போது வளர்ச்சி திட்டமே வேண்டாமா என கேட்ட கேள்விக்கும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எதிர்த்து தேசிய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிக்கு மாநில அரசு ஊழியர்களை தராமல் புறக்கணிக்க எவ்வாறு முடியும் என்பதைகூட அறியாமல் தேசிய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணியை எதிர்க்கும் தமிழக அரசே ஏன் அரசு ஊழியர்களை தருகிறது என்கின்ற அபத்தமான சீமானின் கேள்விக்கு, ஆணையம் சொன்னால் தமிழக அரசு செய்து தானே ஆகவேண்டும் என நிருபர் கூற ஆவேசத்துடன் சீமான் நிருபரை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஒரு பத்திரிகை ஆசிரியராக என்னுடைய வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். சில நாட்களுக்கு முன்பு நீதி மன்றத்தை அரசியல் கட்சியின் கைவிரலாக இயக்குகிறார்கள் என விமர்சனம் செய்த சீமான் நம்நாட்டினுடைய 140 கோடி மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தான், அதைகூட உணராமல் கொச்சைப்படுத்தி அவதூறு பேசிய சீமானின் பேச்சு எதிர்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதால் அவர் மீது நீதிமன்றம் தாமாக முன் வந்து அவதூறு வழக்குப்பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: