மாவட்ட தேர்தல் அலுவலர் பாராட்டு குழந்தை திருமணத்தில் ஈடுபடுபட்டால் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

 

ஜெயங்கொண்டம், நவ.25: 18 வயதிற்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆணின் திருமணம் ஆகியன சட்டப்படி குற்றம் என அரியலூர் எஸ்பி தெரிவித்தார். அரியலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் வழிகாட்டுதலின் படியும், கிராமங்கள் தோறும், பள்ளி, கல்லூரிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குழந்தை திருமணத்தினால் அவர்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் தீமைகள் பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் குழந்தை திருமணத்திற்கு உதவுபவர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இக்குற்றத்திற்கு குற்றவாளிகளுக்கு கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள. மேலும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டிய ரியல் சைல்டு லைன் 1098 என்ற நம்பரை உபயோகித்து தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: