கந்தர்வகோட்டை, நவ.25: கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை கிராமத்தில் மழை நீரில் மூழ்கியுள்ள நெல் வயல்களாள் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையினால் நெல் நடவு செய்திருந்த வயல்களில் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது, இந்த நிலையில் இப்பொழுது விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் நெல் நடவு செய்து வந்துள்ளனர்.
தற்சமயம் தொடர் மழை காரணமாக கடுமயான மழை பெய்து நாற்று நட்ட நெல் வயல்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நெல் பயிர்கள் அழுகி வருவதாகவும் வயல்வெளியில் தேங்கிய மழைநீர் வடிய காலதாமதம் ஆகும் நிலையில் நெல் பயிர்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
