சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களின் தரிசனத்தை அரசு உறுதி செய்ய ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: ­­தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு செல்கிறார்கள். தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற பக்தர்களில் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தும், சாமியை தரிசனம் செய்ய முடியாமலும் திரும்பி சென்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்தும் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் மலைக்குச் செல்வதை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு கேரளாவுக்கு ஐயப்பன் மலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் அனைவருக்குமான பாதுகாப்பையும், சாமி தரிசனத்தையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: