27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை, நவ. 22: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளதாவது: நவம்பர் 2025 மாதத்திற்கான மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.11.2025 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு வேளாண்மை நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: