மன்னார்குடி, தி.பூண்டியில் நடந்தது மன்னார்குடி அரசு கல்லூரியில் மகளிருக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம்

மன்னார்குடி, ஜன.7: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் என்எஸ்எஸ் சார்பில் மகளிருக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி தலைமை வகித்து மகளிருக்கான சுகாதார விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து பேசினார். முனைவர் ரவி முன்னிலை வகித்தார். இம்முகாமில் உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஷர்மிளா பங்கேற்று, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி, மாணவிகள் சுகாதாரம் சம்மந்தமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளித்து மாணவிகள் கொரானா காலக் கட்டத்தில் தங்களின் உடல் நலம் மற்றும் மன நலம் பேணுதலின் அவசியத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், உள்ளிக்கோட்டை மருத்துவ அலுவலர் சிவபிரசாத், என்எஸ்எஸ் அலுவலர்கள் சத்தியாதேவி, ஜென்னி, என்சிசி அலுவலர் ராஜன், செஞ்சுருள் சங்கம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இளைஞர் செஞ்சிலுவை சங்க கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மகேஷ் வரவேற்றார். திட்ட அலுவலர் பிரபாகரன் நன்றி கூறி னார்.

Related Stories: