பாலவனத்தம் சிவன் கோவில் முன்பாக ஜன.10ல் பாஜ சார்பில் ‘நம்மூர் பொங்கல்’ நடிகை கவுதமி பங்கேற்பு

விருதுநகர், ஜன. 6: விருதுநகரில்  பாஜ மாவட்ட தலைவர் கஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: பாரதிய  ஜனதா சார்பில் ‘நம்மூர் பொங்கல்’ என்ற நிகழ்ச்சி ஜன.10ல் விருதுநகர் அருகே  பாலவனத்தம் கிராமத்தில்  உள்ள 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில்  முன்பாக 2 ஆயிரம் பெண்கள் பொங்கல் வைத்து, போட்டிகள் நடத்தி கொண்டாட  உள்ளோம். மதியம் 3 மணியளவில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் கவுதமி  விழாவில் பங்கேற்க உள்ளார்.

விருதுநகர் தொகுதி பூத் கமிட்டி மாநாடு  ஜன.22ல் தமிழகத்தில் முதல் தொகுதியாக விருதுநகரில் நடைபெற உள்ளது. மாநில  தலைவர் முருகன், நயினார் நாகேந்திரன் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க  உள்ளனர். பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் 10 ஆயிரம் பேர் பாஜவில் இணைய  உள்ளதாக தெரிவித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் வெற்றிவேல், பொன்ராஜ்,  சந்திரன், பாண்டுரெங்கன் உடனிருந்தனர்.

Related Stories: