புதிய சாதனை.. ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்ட தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. துறைமுக வரலாற்றில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இறக்கைகள் கையாளப்பட்டது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கின்சோவ் துறைமுத்தில் இருந்து எம்.வி. ஜி.எச்.டி. மரினாஸ் கப்பல் மூலம் இந்த இறக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி,101 இறக்கைகள் கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் நேற்று 103 இறக்கைகள் கப்பலில் இருந்து பாதுகாப்பாக கையாளப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 2300 காற்றாலை இறக்கைகள் இத்துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 61% அதிகம் ஆகும்.

Related Stories: