×

ரவி மோகன் படத்திற்கு ‘ப்ரோ கோட்’ பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி ப்ரோ கோட் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மனோஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் ப்ரோ கோட் என்ற பெயருக்கு தங்கள் தணிக்கை பெற்றுள்ள பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து ‘ப்ரோ கோ பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனம் ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளித்தது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ‘ப்ரோ கோட்’ பெயரை பயன்படுத்த அண்மையில் ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை எதிர்த்து ரவி மோகன் ஸ்டுடியோ சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நிறுத்தி வைக்க மறுத்ததுடன் இத்தகைய மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Tags : Delhi ,court ,Ravi Mohan ,Karthik Yogi ,S.J. Surya ,Malavika Manoj ,
× RELATED ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு...