- கிருஷ்ணகிரி
- சேரசிவரம் சிங்
- சுன்னப்பேட்டை
- ஜார்க்கண்ட்
- பி.செட்டிப்பள்ளி
- கீழமங்களம்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- அகண்டப்பள்ளி
கிருஷ்ணகிரி, நவ.12: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பி.செட்டிப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில், ஜார்க்கண்ட் மாநிலம் சுன்னப்பேட் பகுதியைச் சேரசிவராம்சிங்(24) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி, சொந்த வேலையாக அக்கொண்டப்பள்ளி பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள ஏரியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று முன்தினம், அவர் ஏரியில் சடலமாக மிதந்ததை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், கெலமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று, சேர கேசவராம்சிங் உடலை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
