×

பீகாருக்கு அரியானாவில் இருந்து வந்த 6,000 பேர்

புதுடெல்லி: டெல்லியில் மாநிலங்களவை எம்பி.க்கள் கபில் சிபல், ஏ.டி. சிங் (ஆர்ஜேடி) ஆகியோர் நேற்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது: நவம்பர் 3ம் தேதி, காலை 10 மணிக்கு அரியானாவில் உள்ள கர்னாலில் இருந்து புறப்பட்ட ஒரு ரயில் பானிபட் வழியாக பரூனிக்கு (பீகார்) சென்றது. அதில், 1,500 பேர் பயணம் செய்தனர். அதேநாளில் அடுத்த ரயில் காலை 11 மணிக்கு கர்னாலில் இருந்து புறப்பட்டு பாட்னா வழியாக பாகல்பூருக்குச் சென்றது.

அதில், 1,500 பேர் இருந்தனர். அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு, 3வது ரயில், மாலை 4 மணிக்கு 4வது ரயில் குருகிராமில் இருந்து புறப்பட்டு பாட்னா வழியாக பாகல்பூருக்குச் சென்றது. இந்த 4 ரயில்களில் மொத்தம் 6,000 பேர் இருந்தனர். இவர்கள் எந்த நோக்கத்திற்காக அரியானாவில் இருந்து பீகாருக்கு வந்தனர். 6,000 பயணிகள் ஒரு குறிப்பிட்ட தேதியில் தொகுதிக்கு தொகுதி வாக்களிக்கும் ‘தொழில்முறை வாக்காளர்களாக’ இருப்பார்கள்.

Tags : Bihar ,Ariana ,NEW DELHI ,DELHI ,S. Kabil Sibal ,A. D. Singh ,RJD ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி