×

ரூ.7.81 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

கிருஷ்ணகிரி, நவ.5: போச்சம்பள்ளியில் இ-நாம் முறையில் ரூ.7.81 லட்சத்திற்கு 4285 கிலோ கொப்பரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடந்தது. இதில், 4285 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். கிலோ ஒன்றுக்கு அதிகப்பட்சம் ரூ.216க்கும், குறைந்தபட்சம் ரூ.86.99க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.212க்கும் விற்பனையானது. அதன்படி ரூ.7லட்சத்து 81 ஆயிரத்து 613க்கு விற்பனையானது. இதன் மூலம் 46 விவசாயிகள் பயன்பெற்றனர். இது குறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், இங்கு தேசிய மின்னணு வேளாண்சந்தை (இ-நாம்) முறையில் விவசாய விளைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இ-நாம் முறையில் நடந்த ஏலத்தில், கொப்பரை தேங்காய்கள் நல்ல விலைக்கு போனது. விற்பனை செய்யப்பட்ட தொகைகள் உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், கொப்பரை, பருத்தி மட்டுமின்றி நெல் ஏலமும் மின்னணு வர்த்தக முறையில் நடைபெற உள்ளதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

Tags : Krishnagiri ,-NAM ,Pochampally ,Pochampally Regulated Sale Hall ,Krishnagiri district ,
× RELATED பேனர் வைத்த 7 பேர் மீது வழக்கு