திருச்சி: திருச்சி சீனிவாசாநகரை சேர்ந்த அந்தோணி-கலா தம்பதியின் மகள் மீரா ஜாஸ்மின் (22). எம்எஸ்சி பட்டதாரியான இவர், நேற்றுமுன்தினம் காலை பெற்றோரிடம் ஒரு வேலைக்கான நேர்முக தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவாகியும் திரும்பவில்லை. இதுதொடர்பாக அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மீரா ஜாஸ்மின் செல்போன் சிக்னல், திருச்சி அருகே சனமங்கலம் காப்பு காட்டு பகுதியை காட்டியுள்ளது. அப்பகுதியில் தேடிய போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் மீரா ஜாஸ்மின் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் 2 பீர் பாட்டில்களும் கிடந்துள்ளன. எனவே 2 இளைஞர்கள் டூ வீலரில் அவரை அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
