×

ரூ.1500 லஞ்சம் தாசில்தார் கைது

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பண்ணை திறவை சேர்ந்தவர் அனுசியா. இவர், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதில் காலதாமதம் ஏற்பட்டதால் அனுசியா தனது சகோதரான ரமேஷ் மூலம் தாசில்தார் பாக்கியவதி என்பவரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை நேற்று மாலை சென்ற ரமேஷ், தாசில்தார் பாக்கியவதியிடம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாசில்தார் பாக்கியவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags : Dasildar ,Kielvelur ,Anusya ,Tirukuwela Farm Key ,Nagapattinam District ,Dasildar Bakiwati ,Ramesh ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...