கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பது குறித்து பேச அருவருக்கிறேன்: சீமான் நச்

கோவை: கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை பஸ் வைத்து மாமல்லபுரம் அழைத்து செல்வதற்கு பதிலாக தனியாக சார்ட்டெட் விமானம் மூலம் அழைத்து செல்லலாமா? இது ஒரு கேள்வியா? விஜய் அவர்களை சந்திப்பது அவருடைய விருப்பம். நான் அதைப் பற்றி பேசுவதை அருவருக்கிறேன்.

அதைதாண்டி அரசியல் உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு அரசியல் படுகொலை. அதைப்பற்றி இன்னும் பேசுகிறார்களா? அரசு அதற்கு பொறுப்பேற்றதா? அல்லது இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதா? அரசு வேலை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதா? ஒரு நடிகரை பார்க்க வந்து உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு இழப்பீடு தர வேண்டுமா?

ஒன்றரை மாதமாக இதையே பேச வேண்டுமா? திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், விஜயகாந்த், விஜய், கமலஹாசன் ஆகியோர் எல்லாம் ரசிகர்களை சந்தித்தார்கள். நான் ரசிகரை சந்தித்தேனா என்று நீங்களே கூறுங்கள். என்னுடைய கட்சியில் யாராவது ரசிகர்களாக இருந்து வந்து சேர்ந்தார்கள் என்று கூறுகிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.

* சார் திட்டம் வந்தால் இந்தி பேசும் மாநிலமாக மாறிடும் தமிழ்நாடு
‘தேர்தல் ஆணையத்தின் சார் திட்டம் குறித்த தொல்.திருமாவளவன் கூறிய கருத்தை வரவேற்கிறேன். அதேசமயம் ஒன்றரை கோடி வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்துவிட்டால், தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும்.

ஆனால் இங்குள்ள பல்வேறு சாதியினர் ஒன்றாக இல்லை என்றால், அவர்கள் இந்தி என்ற மொழியில் ஒன்றாக நின்று விடுவார்கள். பிறகு அனைத்தும் பாஜ வாக்குகளாக மாறிவிடும். அவர்களிடம் என்னுடைய அரசியலும், அதிகாரமும் சென்று விட்டால் தற்போது உள்ள நிலத்திலிருந்தும் வெளியேற வேண்டிய அகதியாக மாறுவோம். கோவையில் வானதி சீனிவாசன் பெற்ற 20,000 வாக்குகள் வட இந்திய வாக்குகள்தான்’ என்று சீமான தெரிவித்தார்.

Related Stories: