×

தஞ்சாவூர் அருகே பரபரப்பு; ஆசிரியருக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர்: பள்ளியில் மாணவன் திடீர் தற்கொலை

பேராவூரணி: ஆசிரியருக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர் கொடுத்ததை பெற்றோரிடம் சொன்னதால் பள்ளி வளாகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் அருகே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு(20). மதுரை அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுவர் கொக்கியில் வேட்டியால் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். தகவலறிந்து சேதுபாவாசத்திரம் போலீசார் வந்து விசாரித்தனர்.

விஷ்ணு உடல் அருகில் கிடந்த மரக்கிளை இலையில், என் சாவுக்கு பாபு தான் காரணம் என பேனாவில் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது. யார் அந்த பாபு என விசாரணையில், விஷ்ணு தற்கொலை செய்து கொண்ட பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாபு (40) என்பதும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வௌிவந்தது.பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் ஆசிரியருடன் விஷ்ணுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பை பயன்படுத்தி, கடந்த 3மாதங்களாக ஆசிரியர் பாபுவிற்கு, விஷ்ணு விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது போனில் ஓரின சேர்க்கை டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் பாபு, மாணவனின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து விஷ்ணு தொந்தரவு செய்ததால் விஷ்ணுவின் செயல்பாடுகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் பாபு கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், விஷ்ணுவை கண்டித்ததுடன் இனி விஷ்ணுவால் எந்த தொந்தரவும் வராது என ஆசிரியர் பாபுவிடம் உறுதியளித்துள்ளனர்.நேற்றுமுன்தினம் விஷ்ணுவை அவரது அண்ணன் கண்டித்து கல்லுாரிக்கு செல்லும்படி பஸ் நிறுத்தத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார். இதில் மனமுடைந்த விஷ்ணு, கல்லூரிக்கு செல்லாமல் ஆசிரியர் பாபுவை பழி தீர்த்து, அவருக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆசிரியர் பெயரை எழுதி வைத்து பள்ளி வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thanjavur ,Peravoorani ,Vishnu ,Periyasamy ,Chinnamanai ,Sethubavasatraram ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...