தீபாவளியை ஒட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 275 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 275 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் புறநகர் பேருந்து நிலையங்களுக்கு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

20.10.2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
2. கோயம்பேடு பேருந்து நிலையம்
3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களில் இயக்கபட உள்ளது.

Related Stories: