முருங்கைக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

முருங்கை இலை – 1 கைப்பிடி அளவு
தண்ணீர் – 200 மி.கி
மிளகு – 1தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
சிரகம் – அரை தேக்கரண்டி.

செய்முறை:

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, சீரகம், மிளகு, பூண்டு இவை அனைத்தும் ஒன்றுக்கு இரண்டாக இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும் பிறகு காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.