தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி சந்தனராஜ் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி சந்தனராஜ் கைது செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக பேசியபடி தன்னை பிடிக்க வந்த உதவி ஆய்வாளரை இளைஞர் வெட்ட முயற்சித்துள்ளார். போலீசார் சுற்றி வளைத்து பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் ரவுடி சந்தனராஜ் என்பது தெரிய வந்தது. லூர்தம்மாள்புரம் சுடுகாட்டில் ஒருவரை உயிருடன் புதைத்து கொன்ற வழக்கில் சந்தனராஜ் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

Related Stories: