கேரளா கடத்த முயன்ற 450 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

 

கோபி: கெம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து கேரளா கடத்த முயன்ற 450 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். தாசாரிபாளையம் அருகே கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் இருந்து 450 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். துண்டு துண்டாக வெட்டி மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தன மரக்கட்டைகள், வேன் பறிமுதல் செய்து கேரளாவைச் சேர்ந்த ஜைனுல் ஆபிதீன்(45), அப்துல் ரசாக்(50) ஆகியோரை கைது செய்தனர்.

 

Related Stories: