×

குத்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ.18 லட்சத்தில் புதிய அங்கன்வாடி

 

 

திருவள்ளூர், அக்.9: பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சி, இருளப்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் டி.தேசிங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, மகேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நிகழ்வில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜசேகர், திமுக ஒன்றிய நிர்வாகிகள் கந்தபாபு, சுமதி விஜயகுமார், சாக்ரட்டீஸ், கூடப்பாக்கம் கந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Anganwadi ,Kuthambakkam Panchayat ,Thiruvallur ,Irulapalayam ,Poonamalli Union ,
× RELATED நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள்...