வாழைக்காய் புட்டு!

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 1
சின்ன வெங்காயம் – 5
பச்சைமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிது
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை வேக வைத்து தோல் உரித்து சிறியதாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை,பச்சைமிளகாய், தாளிக்கவும்.பின்னர் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் வாழைக்காய்,உப்பு சேர்த்து வதக்கவும்.