காவேரிப்பட்டணத்தில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, டிச.26: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு, காவேரிப்பட்டணம் மத்திய ஒன்றியம் சார்பில், அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்பி நரசிம்மன், மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மீசை அர்ச்சுனன், காவேரிப்பட்டணம் மத்திய மண்டல தலைவர் குமரய்யன், மேற்கு ஒன்றியம் ஸ்ரீதர், மாவட்ட துணை தலைவர் தேவராஜ், ஓபிசி மாவட்ட தலைவர் காளிரத்தினம், மாவட்ட செயலாளர் பிரபா, விவசாய அணி மாதவன், கலை இலக்கியம் சுப்பிரமணி, ஊடக பிரிவு கங்கை அமரன், ஐடி பிரிவு பாபு, தமிழ் வளர்ச்சி தலைவர் ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: