மாரத்தான் போட்டியில் ஓடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை: சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வங்கி ஊழியர் பரமேஷ் (24) உயிரிழந்தார். மாரத்தானில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர், நேற்று 21 சுற்றுகள் கொண்ட போட்டியில் 18 சுற்றுகளை நிறைவு செய்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: