தேவையானவை
வரகு அரிசி – 1கப்
கடலைப் பருப்பு – கால் கப்
துவரம் பருப்பு – கால் கப்
உளுந்து – 2 தேக்கரண்டி
பாசிப்பருப்பு – 2 தேக்கரண்டி
அவல் – 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 5
வெங்காயம் – 2
இஞ்சி – 1 சிறிய துண்டு
பெருங்காயம் – சிறிதளவு
கொத்துமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வரகு அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். அவலை தனியே ஊற வைக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அரிசியையும் பருப்பையும் சேர்த்து அதனுடன் மிளகாய்வற்றல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மாவு நன்கு மசிந்தவுடன் அவலை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், தோசைக்கல்லை சூடாக்கி மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும். சுவையான வரகு அடை ரெடி.
