இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் அன்புமணியுடன் சந்திப்பு

 

சென்னை: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டமான் சென்னையில் நேற்று பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எனது பள்ளி நண்பரும், இலங்கை முன்னாள் அமைச்சருமான மறைந்த எஸ்.ஆர்.எம் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டமான் சென்னையில் உள்ள எனது இல்லத்தில் என்னை சந்தித்து பேசினார். அப்போது திருப்பத்தூரில் மணமகள் ரா. சீதைஸ்ரீ நாச்சியாருடன் நடைபெற உள்ள தமது திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: