சங்கரன்கோவில், செப். 24: தென்காசி வடக்கு மாவட்ட மதிமுகவினர் கட்சியின் பொதுசெயலாளர் வைகோ பிறந்த நாளை சங்கரன்கோவில் -திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியதோடு குழந்தைகளுக்கு இனிப்பு, சிற்றுண்டி வழங்கினர். மதிமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இசக்கியப்பன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ், குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பொன் ஆனந்தராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஹக்கீம், கனிராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, சுப்புலாபுரம் மணி, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் ரத்தினவேல்குமார், வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார், தென்காசி பாராளுமன்ற தொகுதி இணையதள ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்சங்கரன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், நம்பிராஜன், கனகராஜ், என்ஜிஓ காலனி வார்டு உறுப்பினர் ஜலால், வாசுதேவநல்லூர் மாரியப்பன், சங்கரன்கோவில் நகர நிர்வாகிகள் முருகேசன், பாலமுருகன், சுப்பையா, சங்கரநாராயணன், மெடிக்கல் கணேசன், மாரிமுத்து, சேதுராமலிங்கம், பேச்சிமுத்து, மைதீன், நாராணாபுரம் முருகானந்தம், வேப்பங்குளம் வேலுச்சாமி, புளியங்குடி சங்கர், பாட்டக்குறிச்சி முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வைகோ பிறந்த நாளையொட்டி சங்கரன்கோவில் சிறப்பு பள்ளியில் மதிமுகவினர் உணவு வழங்கல்
- மதிமுக
- சங்கரன்கோவில் சிறப்புப் பள்ளி
- வைகோ
- சங்கரன்கோவில்
- பொதுச்செயலர்
- தென்காசி வடக்கு மாவட்டம்
- வின்மீன் சிறப்பு குழந்தைகள் பள்ளி
- திருவேங்கடம்
- ம.தி.மு.க.…
