கள்ளக்குறிச்சி எஸ்பி, டிஎஸ்பி அலுவலகத்தில் ஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி, டிச. 23:    கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்னை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனையடுத்து கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். அதாவது குற்றவழக்கு பதிவு கோப்புகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு கோப்புகள், போக்குவரத்து சம்பந்தமான வழக்கின் கோப்புகள், காவலர் பணி பதிவேடு கோப்புகள் உள்ளிட்ட கோப்புகளை ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதி மற்றும் நகரத்தின் முக்கிய சாலை பகுதியில் மொத்தம் 76 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. அதனை திறப்பதற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் அலுவலகம் ஆய்வு பணிகள் முடித்த பிறகு சிசிடிவி கேமராவை திறந்து வைக்க அதிகாரிகள் கேட்டுகொண்டதற்கு ஐஜி மறுத்துவிட்டார். மேலும் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கும் மறுத்துவிட்டார். அப்போது கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் நிலையத்திற்கு போதுமான காவலர்கள் இல்லை. கள்ளச்சாராயம் ஏலம் விட்டு விற்பனை  நடைபெறுகிறது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் போக்குவரத்து நெரிசல் பணிகளை பார்ப்பதே இல்லை.

ஆய்வாளர் நான்கு வழிசாலை மற்றும் டோல்கேட் பகுதிக்கு சென்றுவிடுவதால் கள்ளக்குறிச்சி நகரத்தில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அனைத்து பிரச்னைகளும் உடனடியாக தீர்க்கப்படும் என ஐஜி உறுதியளித்தார். அப்போது எஸ்பி ஜியாவுல்ஹக், டிஎஸ்பி ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: