×

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு, செப்.23: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் 27ம் தேதி (சனிக்கிழமை) அன்று விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் – ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து பையனூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 5000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ, ஐடிஐ, டிப்ளமோ, போன்ற கல்வித் தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 40வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்நகல்கள், சுய விவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 27.09.2025 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, பழைய மாமல்லபுரம் ரோடு, பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் – ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறும். இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு 044-27426020, 94868 70577, 93844 99848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Tags : Chengalpattu ,Chengalpattu District ,Collector ,Sneha ,Chengalpattu District Employment and Career Guidance Center ,Vinayaka Missions Research Institute ,Arupadai… ,
× RELATED ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட...