வீரவநல்லூர், செப். 18: வீரவநல்லூரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத வாலிபரை போலீசார் கைது செய்தனர். வீரவநல்லூரை அடுத்த புதூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிசந்திரன் மகன் கரன்(28). இவர் மீது கடந்த 2019ல் வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த கரன் கடந்த 2 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமல் இருந்துள்ளார். இதையடுத்து சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் கரன் மீது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரவநல்லூர் போலீசார் நேற்று கரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
