திருப்பதி சலகட்ல பிரம்மோற்சவம்

திருப்பதி : திருப்பதியில் பெருமாள் வழிபாட்டிற்குரிய புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சலகட்ல பிரம்மோற்சவ விழா ஒன்பது நாட்கள் நடக்கும் உற்சவமாகும். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி செப்டம்பர் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களிலும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் காலையிலும், மாலையிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து அருள்பாலிப்பார். காலை 8 முதல் 10 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவை, பிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களிலும் நடைபெறும்.

செப்டம்பர் 24 – மாலை கொடியேற்றம்
செப்டம்பர் 25 – காலை சின்ன சேஷ வாகனம், மாலை ஹம்ச வாகனம்
செப்டம்பர் 26 – காலை சிம்ம வாகனம், மாலை முத்யாபு பண்டரி வாகனம்
செப்டம்பர் 27 – காலை கற்பவிருட்ச வாகனம், மாலை சர்வ பூபால வாகனம்
செப்டம்பர் 28 – மோகினி அவதாரம், மாலை கருட வாகனம்
செப்டம்பர் 29 – ஹனுமந்த வாகனம், மாலை தங்க ரதம், இரவு கஜ வாகனம்
செப்டம்பர் 30 – காலை சூரிய பிரபை வாகனம், மாலை சந்திர பிரபை வாகனம்
அக்டோபர் 01 – காலை ரத உற்சவம், மாலை அஸ்வ வாகனம்
அக்டோபர் 02 – சக்ர ஸ்நானனம் (அன்று இரவு கொடியிறக்கம்

Related Stories: