சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தொலைதூர கல்வி கற்போர் மையம் தொடக்கம்

சாத்தான்குளம், டிச.21: சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சின்னத்தாய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  கொரோனா காரணமாக கற்பிப்போர் மையத்தின் வகுப்புகள் இணையவழியாக நடக்கிறது. இளங்கலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல்,  கணிதவியல்,தொழில்நிர்வாகவியல், கணினி அறிவியல் ஆகிய பட்டப்படிப்புக்களும் முதுகலையில் ஆங்கிலம், கணிதவியல், வணிகவியல் ஆகிய பட்டப்படிப்புக்களும் உள்ளன.

மேலும் டிப்ளமோ இன் ஆட்டோமேஷன் என்ற குறுகியகாலச் சான்றிதழ் படிப்பும் கற்றுத்தரப்படுகிறது. சேர விரும்புகிறவர்கள் புகைப்படம், கையெழுத்து மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் சுயகையொப்பத்துடனும், பணிபுரிபவர்கள் என்றால் பணி அனுபவச் சான்றிதழுடனும் ஆதார் ஆகியவற்றையும் ஸ்கேன் செய்து nougase@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இளநிலையில் சேர பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழும், முதுகலையில் சேர இளநிலை மதிப்பெண் சான்றிதழையும் ஸ்கேன் செய்து டிச.31க்குள்  மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். தங்கள் சேர்க்கையை உறுதிச் செய்ய கல்லூரிக்கு வரவேண்டும். இணையவழியாக சேர்க்கை கட்டணம் செலுத்தலாம். பாடப் புத்தகங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: