மதமாற்ற தடைச்சட்டம் மாநிலங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நாட்டின் உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,‘‘ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் குண்டர்கள் மதமாற்றம் என்ற பிரச்சனையை செய்து வருகின்றனர். இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைப்பது சிரமமாக உள்ளதோடு, குறைந்தபட்ச தண்டனை இருபது ஆண்டுகள் என்று உள்ளது.

எனவே இதுதொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ள உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: