கிருஷ்ணகிரி அருகே ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம்

கிருஷ்ணகிரி,டிச.17: கிருஷ்ணகிரி வட்டாரத்தில், வேளாண்மைத்துறை மூலம் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், நேற்று நேரில் ஆய்வு செய்தார். இத்திட்டத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும், கறவை மாடு ஒன்று, ஆடுகள் (1 ஆண், 9 பெண்), கோழிகள் (9 பெண்,1 ஆண்), மண்புழு உரக்குடில் அமைக்க, மா செடிகள் (20 எண்கள்) நடவு செய்ய, தேன் பெட்டிகள் (2 எண்கள்) வளர்க்க மற்றும் ராகி செயல் விளக்கத்திடல் அமைத்தல் போன்ற அனைத்திற்கும் சேர்த்து, 50 சதவீதம் மானியமாக ₹60 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நாரலப்பள்ளி கிராமத்தில் கறவை மாடுகள், ஆடுகளுக்கு காப்பீடு செய்யும் பணியை, வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். அப்போது, துணை இயக்குனர் கிருஷ்ணன், உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை அலுவலர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி அலுவலர் விஜயன் செய்திருந்தார்.

Related Stories: