அறந்தாங்கி,ஆக. 27: புதுக் கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் கொக்கு மட ரமேஷ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் கண் மருத்துவர் நீண்ட நாட்களாக இல்லை. உடனே கண் மருத்துவர் நியமிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட இந்த அரசு சுகாதார நிலையத்தில் கண் மருத்துவர் நீண்ட நாட்களாக இல்லை. இதனால் இந்த பகுதியில் சுற்றி உள்ள களக்குடி, மணவா நல்லூர், மைவயல், வேதியங்குடி, ஆழடிக்காடு, வேட்டனூர், சாத்தகுடி ராஜா, பட்டமுடையான், இடையன் கொள்ளை, எட்டிசேரி, காரணிக்காடு, வெட்டிவயல் அரியமரக்காடு, சீனமங்கலம் குகனூர், தாராவையில் தேடாக்கி புறங்காடு, கிடையாது ஏகணிவயல்,
கண்டிச்சங்காடு, ஏகபெரும்மலூர், வெள்ளாட்டுமங்கலம் மற்றும் திருநெல்வயல், கூகனூர் உள்ளிட்ட50 க்கு மேற்பட்ட கிராமத்திலிருந்து ஒரு நாளைக்கு 200 க்கு மேற்பட்டோர் மருத்துவமணைக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில் தொடர்ந்து கண் மருத்துவர் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் சிரமமாக சூழ்நிலையில் உள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு இந்த மருத்துவமணைக்கு கண் மருத்துவரை உடனே நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் குறி்ப்பிட்டுள்ளார்.
