ஆசிரியர் நியமன முறைகேடு; திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது: அமலாக்கத்துறை அதிரடி

கொல்கத்தா: ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் நியமன முறைகேட்டில் 2023-ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்ட ஜிபன் கிருஷ்ண சாஹா அதன்பின்னர் விடுவிக்கப்பட்டார். மேற்கு வங்கத்தில் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ ஊழியர்கள், 9 முதல் 12-ஆம் வகுப்பு உதவி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணியமர்த்துவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ பதிவு செய்த எப்ஐஆரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. வீட்டில் இன்று சோதனை நடத்தியது.

ED சோதனையின்போது வீட்டின் சுவர் ஏறி குறித்து திரிணாமுல் எம்.எல்.ஏ. தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் தனது செல்போன்களையும் வீசியுள்ளார். அப்போது சாஹாவை கைது செய்த போலீசார், அவர் வீசிய செல்போன்களையும் மீட்டுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறி திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. ஜிபன் கிருஷ்ண சாஹாவை அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும், எம்எல்ஏவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

Related Stories: