இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் டெல்லியில் திறப்பு

சென்னை: டெல்லி, தரியா கஞ்ச் பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைமையகமான காயிதே மில்லத் சென்டர் திறப்பு விழா நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகித்தார்.

இதில் தமிழக அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் குஞ்சாலன் குட்டி எம்எல்ஏ, நவாஸ் கனி எம்பி, அபு பக்கர், இ.டி.முகமது பஷீர் எம்பி, திமுக சிறுபான்மையினர் நல அணி இணை செயலாளர் பூவை ஜெரால்டு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: