விவாகரத்து கவுன்சிலிங் பெண்ணிடம் அவமரியாதை நீதிபதி மாற்றம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சவராவில் குடும்ப நல நீதிமன்றம் உள்ளது. இங்கு நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். இப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் விவாகரத்து கோரி இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி உதயகுமார் உத்தரவின் பேரில் அந்த இளம்பெண் கவுன்சலிங்கில் ஆஜரானார்.

அப்போது நீதிபதி உதயகுமார் அந்த இளம்பெண்ணிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், நீதிபதி உதயகுமாரை கொல்லம் மாவட்ட மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

Related Stories: