ரூ.60.85 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு கிடங்குகள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ரூ.60 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரியலூர் மாவட்டம், ஆத்துக்குறிச்சி, மதுரை மாவட்டம், மேலக்குயில்குடி, உசிலம்பட்டி வட்டம், சீமானுத்து, விருதுநகர் மாவட்டம், கங்கர்செவலிலும், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், கீழ்ப்புத்தூரில் ரூ.5.50 கோடி செலவில் 3000 மெ.டன் கொள்ளளவிலும், மதுரை மாவட்டம், திருவாதவூர், வாடிப்பட்டி வட்டம் குலசேகரன்பேட்டை, கடலூர் மாவட்டம், டி.புடையூரிலும், திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி கிராமம், அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமம் என மொத்தம் ரூ.60 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல்முறை கிடங்குகள், 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் 2 நவீன சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 63 பேருக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 55 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். அமைச்சர்கள் அர.சக்கரபாணி, சி.வி.கணேசன், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சத்யபிரத சாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: