அம்பை வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

அம்பை,ஆக.22: அம்பையில் அடிதடி, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அம்பை அருகேயுள்ள பிரம்மதேசம் மாதாங்கோவிலை சேர்ந்த மாரியப்பனின் மகன் சண்முகசுந்தரம் என்ற சண்முககுட்டி (25). இவர் அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை எஸ்.பி. சிலம்பரசனுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து எஸ்.பி. பரிந்துரை ஏற்று கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் சண்முககுட்டி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அதன்பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் சண்முககுட்டி அடைக்கப்பட்டார்.

Related Stories: