சொஜ்ஜி அப்பம்

தேவையானவை:

ரவா – 200 கிராம்,
சர்க்கரை- 400 கிராம்,
கோதுமை மாவு (அ) மைதா மாவு – 250 கிராம்,
சோடா உப்பு – 2 சிட்டிகை,
கலர் பவுடர் – சிறிது,
ஏலக்கா தூள் – ½ டீஸ்பூன்,
நெய் – 150 கிராம்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ரவையை பொன்னிறமாக வறுத்து தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை அடுப்பில் வைத்து ேவகவைத்து சர்க்கரை, நெய் சேர்த்து சொஜ்ஜியாக கிளறிக் கொள்ளவும். அத்துடன் கலர்பொடி, ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் கோதுமை மாவு (அ) மைதாவை சலித்து சிறிது உப்புச் ேசர்த்து, சமையல் சோடா, சிறிது எண்ணெய் சேர்த்து நன்குப் பிசையவும். ஒரு இலையில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து நடுவில் சொஜ்ஜியை சிறிது வைத்து மூடவும். பின் அதை வட்டமாகத் தட்டி வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும். இது இனிப்பாகவும், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.