நாகர்கோவில், ஆக.19 : குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள் ஆகும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான //www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு, வடிவமைப்பு பயிற்சி
- நாகர்கோவில்
- குமாரி மாவட்டம்
- கலெக்டர்
- அழகுமீனா
- ஆதி
- திராவிடர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்
- Tadco
