அறந்தாங்கி, ஆக. 18: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மாதிரி மேநிலைப் பள்ளியில் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பார்த்திபராஜா வரவேற்றார். நிகழ்ச்சியியை, அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் ரா.ஆனந்த் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம், சதுரங்கம், சிறுதானிய உணவுகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஓவிய ஆசிரியர் ஜேம்ஸ் பாண்ட், ஊரப்பட்டி வெங்கடேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் துரை.ரஞ்சன், செயலாளர் ராஜா, பொருளாளர் விஸ்வமூர்த்தி, துணைச் செயலர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பரக்கத்துல்லா நன்றி கூறினார்.
