ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் தளிர் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

ஒரத்தநாடு, ஆக.15: ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான தளிர் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு வந்த கலெக்டர் பிரியங்காவை அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் வெற்றிவேந்தன், தாசில்தார் யுவராஜ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து அக்கறை கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உடல் நலமில்லாமல் இருந்தால் உடனடியாக குழந்தைகள் மருத்துவரை அணுக வேண்டும். பால், முட்டை தானியங்கள் போன்ற உணவு வகைகளை அதிக அளவில் குழந்தைகளுக்கு தர வேண்டும். ஊட்டச்சத்து குறைவாக இருக்கிற குழந்தைகளை உடனடியாக பரிசோதித்து தேவையான ஊட்டச்சத்து அளிக்க வேண்டும் என்று தாய்மார்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

முகாமில் 12 குழந்தைகள் மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இருப்பதாக கண்டறியப்பட்டு அரசு பொது மருத்துவமனை சார்பில் ஊட்டச்சத்து அதிக அளவில் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு தாய்மார்களுக்கு அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இந்த விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர்.

 

Related Stories: