- திருவண்ணாமலை பாக்சோ நீதிமன்றம்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை பாக்சோ நீதிமன்றம்
- ரவிச்சந்திரன்
- அரவிந்த்
- கர்ணம்புண்டி
- திருவண்ணாமலை மாவட்டம்
- கல்பென்னாத்தூர்
திருவண்ணாமலை, ஆக.15: சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் அரவிந்த்(20). இவர் கடந்த 7.3.2020 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மிரட்டி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அப்போது, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வாலிபர் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரவிந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். மேலும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். அதோடு, அரவிந்த் தனது வாழ்நாள் முழுவதும் (சாகும் வரை) சிறையில் இருக்க வேண்டும் என தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்தை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
