மின்வேலி அமைக்க சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி

திருமங்கலம், ஆக. 14: கள்ளிக்குடி அருகேயுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் தங்கபாண்டி(52). இவருக்கு அருகேயுள்ள சித்தூரில் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. தற்போது அந்த நிலநத்தில் அவர் மிளகாய் செடிக்கான விதைகளை போட்டுள்ளார். நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று முன்தினம் சென்ற அவர் தண்ணீர் விட்டால் காட்டுப்பன்றிகள் நிலத்தில் நுழைந்து விதைகளை நாசம் செய்துவிடும் என கருதினார்.

இதனால் வீடு திரும்பிய அவர், மிளகாய் விதை பாத்தியை சுற்றி மின்வேலி அமைக்கப்போவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றார்.ஆனால் இரவு வரை தங்கபாண்டி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் பாண்டியராஜன்(21) தங்களது விளைநிலத்திற்கு சென்று பார்த்த போது தங்கபாண்டி மின்சாரம் தாக்கி உயிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வில்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கபாண்டியின் உடலை மீட் டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: