மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை, ஆக. 14: மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பாலம் ஸ்டேசன் ரோட்டில் தூண்கள் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதனால் ரயில்வே மேம்பாலத்தின் முடிவில் உள்ள கபடி ரவுண்டானிவிலிருந்து கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் பாலம் ஸ்டேசன் ரோட்டின் இடதுபுறச்சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆக.14ம் தேதி (இன்று) முதல் பாலம் ஸ்டேசன் ரோட்டின் இடது புறம் பாலம் வேலை நடைபெற உள்ளதால், கபடி ரவுண்டானாவிலிருந்து கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் பாலம் ஸ்டேசன் ரோட்டின் வலதுபுறம் புதிய சாலையில் செல்ல வேண்டும். இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ேபாலீசார் கோரியுள்ளனர்.

 

Related Stories: